/ மாணவருக்காக / சுராவின் இயர் புக் 2010
சுராவின் இயர் புக் 2010
சுரா காலேஜ் ஆப் காம்படிஷன், 1620, "ஜே பிளாக், அண்ணாநகர், சென்னை 40,மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக, வேலைவாய்ப்புகளை பெறுவதே குதிரைக் கொம்பாகிவிட்டது. தகுதி, திறமை மற்றும் பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்த புத்தகம் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில், தற்போதைய நாட்டு நடப்புகள், தமிழகத்தில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்கள், புதிய மாநகராட்சி அந்தஸ்து பெற்ற நகராட்சிகள், அதன் மேயர்கள் போன்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய நில, நீர்வள ஆதாரங்கள், தொழில் வளம், மாநிலங்கள், தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில முதல்வர்கள் என, பல முக்கிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.