/ கதைகள் / சுழலும் மர்மம்
சுழலும் மர்மம்
இளைஞன், திருநங்கை, பிரபல நடிகை என்ற மூன்று கதாபாத்திரங்கள் ஒன்றிணைவதை மையமாக்கிய நாவல் நுால். அதிசயிக்கத்தக்க அமானுஷ்ய மாற்றங்கள் பற்றி விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. கற்பனை சக்தியும், பரந்துபட்ட வாசிப்பின் யுக்தியும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வியக்க வைப்பதாக உள்ளன. பெண்கள் கருவுற்று இருப்பதை, கால் தடயத்தில் மெட்டியின் வழியாக கண்டறிந்து விடலாம் என்ற அரிய செய்தி, கதையின் ஊடாக சொல்லப்பட்டுள்ளது. காளி ஒரு சமயம் அரக்கியை அழிக்க முற்பட்ட போது, கர்ப்பமாக இருந்ததை அறிந்து அந்தக் கருவிற்கு எந்த சேதாரமும் ஏற்படாமல், காதில் குண்டலமாக்கி வதம் செய்ததை விவரிக்கிறது. அமானுஷ்யம், வாழ்க்கையில் எப்படி எல்லாம் நிகழ்கிறது என்று விவரிக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




