/ ஆன்மிகம் / உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நீதி போதனைகள்
உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நீதி போதனைகள்
சனாதன தர்மம் போதிக்கும் அற நெறிகளின் தொகுப்பு நுால். போதனைகள் படித்தால் தவறு வராது என அறிவுரைக்கிறது. முதல் பகுதியில் நீதி நெறி, அற நெறி பண்பாடு உள்ளது. அடுத்தது அற நுால்கள், நீதி நெறி பாடல்கள் அமைந்துள்ளன. டாக்டருக்கு ஒரு செயல்பாடு இருக்கிறது. வழக்கறிஞருக்கு ஒரு இயங்கும் முறை இருக்கிறது. அதன்படி நடப்பது தான் தர்மம் என்கிறது. தனிமனிதன், குடும்பம், சமுதாயம், தேசியம் என ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் தர்மம் தழைக்கும் என்கிறது. பிறருக்கு நன்மை ஏற்பட பிரார்த்திப்பதே உயர்ந்த தானம் என்கிறது. ஆன்ம பலம் பெற படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச் சாத்தன்




