/ புத்தக மதிப்புரை / தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம்- 13)

₹ 650

மர்மங்கள் நிறைந்த நெடுங்கதைகளின் தொகுப்பு நுால். துப்பறிய கற்றுத் தருகிறது. மஞ்சள் தலையணை, உயிரும் உடலும், கிழக்கே உதித்த காதல், உயிர் வாழ்வது உன்னாலே என்ற நாவல்கள் இடம் பெற்றுள்ளன. திடுக்கிட வைக்கும் மர்மம் நிறைந்த கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை விவரிக்கிறது. வைரம் பதுக்கிய ரகசியத்தை வெளிப் படுத்துகிறது. நம்பிக்கைத் துரோகம், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிப்பது, உண்மை வெற்றி அடையும் போன்ற கருத்துக்களை கொண்டு உள்ளன. கொலை, டுமீல் என துப்பாக்கிச் சத்தம், போலீஸ் விசாரணை, உண்மை விளக்கப்படுதல் என திருப்பங்களோடு அமைந்துள்ளன. காட்சிப்பூர்வமாக அமைந்துள்ள நாவல்களின் தொகுப்பு நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை