/ கதைகள் / தவ்வை

₹ 250

ஆணின் பாலியல் குறைபாடு, பெண்ணை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விவரிக்கும் நாவல். பெண்ணின் நினைவோட்டம், கதையை நகர்த்துகிறது. நெல்லை வட்டார வழக்கு, உரையாடலை அழகாக்குகிறது. பெண்ணின் இயல்பான ஆளுமையை சிதைத்து, மனச்சிக்கல் துயரத்தை சொல்கிறது.உரையாடலில் சில பகுதிகள்...‘நீ வாழப்போற இடம், மிகவும் வசதியானது; நம்ம மாதிரி இல்ல அவங்க... கேக்குதாட்டி நான் சொல்வது? எது நடந்தாலும் அனுசரிச்சு போ; இங்க ஏதுமில்ல புள்ள; அங்க எல்லாம் இருக்கு; கவனமாக நடந்துக்கோ’ – தாய், மகளிடம்.‘புள்ள வேணுமாம் அவுகளுக்கு!’ – மகள், தாயிடம்.‘சரிடி, அது என்ன கொலை குத்தமா? உலக வழக்கம் தானே; உன் வயசுக்கு பத்து பெத்துக்கலாமே; வருஷம் முடிஞ்சு, நாலஞ்சி மாதமும் ஓடியாச்சு, இன்னுமா மாப்பிள்ளை கூட படுக்காம இருக்க’ – என, தாய் எரிச்சல் குரலில், மகளிடம்.குடும்ப வாழ்க்கையை விவரிக்கிறது.– டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ