/ கவிதைகள் / பகவத் கீதை எளிய கவிதை வடிவில்
பகவத் கீதை எளிய கவிதை வடிவில்
பகவத் கீதை கருத்து இனிய நடையில் அமைந்துள்ள நுால். கலைமகள் துதியிலிருந்தே கவிதை மழையாக பொழிகிறது. தத்துவ கருத்துகள் எதார்த்த நடையில் சொல்லப்பட்டுள்ளன. அத்தியாயங்கள் முழுமையாக உள்ளன. எந்தெந்த வீரர் கையில் என்னென்ன சங்கு இருந்தன என்பது விரிவாக தரப்பட்டுள்ளது. அறிவு, சிரத்தையின்றி ஐயமுற்றோன் அழிவுறுவான் என கண்ணனின் வாக்கியம் பொருந்தும் வகையில் கூறப்பட்டு உள்ளது. பட்டினியாய் இருப்பவன், அளவின்றி உண்பவன், துாங்காமல் இருப்பவன், பெரும் துயில் கொண்டவன் யோகத்திற்கு பொருந்தாதவன் என்பது நயமாக சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனம் சிறப்பாக எடுத்து சொல்லப் பட்டுள்ளது. படித்து பாதுகாக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்




