/ கதைகள் / குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வந்த பணிப்பெண்
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வந்த பணிப்பெண்
சின்னஞ்சிறு சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக உள்ளன. கிறிஸ்துவ திருமண முறை மற்றும் சடங்குகள் சார்ந்த படைப்புகளுடன் வித்தியாசமாக அமைந்துள்ளது. பொது அறிவு இல்லாதவரை வேலைக்கு அமர்த்தினால் என்ன நடக்கும் என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது. அரசியல் செல்வாக்கு, ஏழை மக்கள் குடியிருப்பை காலியாக்குவதையும், உள்ளடி வேலை செய்வதையும் சுட்டிக் காட்டுகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளி மகனை படிக்க வைக்க துடிப்பது, மகன் அப்பாவுக்காக வருந்துவது என உருக்கம் தரும் வகையில் உள்ளது. வீட்டுக் கணக்கு எழுதும் சிறப்பு பற்றி உரைக்கும் கதையும் உள்ளது. நீதிக்கதைகளின் தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்




