/ பொது / திமில்
திமில்
ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் உடைய நுால். நிரை கவர்தல் என்ற வெட்சி திணை, நிரை மீட்டல் என்ற கரந்தை திணை போர் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய காளைகள் குறித்து இலக்கிய சான்றுகள் தரப்பட்டுள்ளன. மாடு, மனித உறவு பற்றி ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. சிந்து சமவெளி அகழாய்வில் தமிழர் தொடர்பு நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் மறைந்து போன 857 காளை வகைகள், மாட்டின் உடலில் அமைந்த 32 சுழிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காளை வளர்ப்பு, ஜல்லிக் கட்டு நடத்தும் முறை, விதிக்கப்பட்ட தடைகளை உடைக்க நிகழ்ந்த போராட்டம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு பற்றிய ஆவண நுால். – புலவர் சு.மதியழகன்




