/ புத்தக மதிப்புரை / திருக்குறளோடு விளையாடு! (பாகம் – 3)
திருக்குறளோடு விளையாடு! (பாகம் – 3)
திருக்குறளில் அமைந்துள்ள புதிர்களை அவிழ்ப்பதன் வழியாக புத்திசாலித்தனத்தை வளர்க்க உதவும் புத்தகம். டாக்டர் மு.வ., எழுதிய தெளிவுரையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய குறள்களுக்கு விளக்கமும் சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குறள் புதிரிலும் ஒரு வார்த்தையை மட்டும் தராமல், விடுபட்டதற்கு ஏற்ப, மூன்று சொற்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சரியானதை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதி பூர்த்தி செய்யும் வகையில் போட்டியாக அமைக்கப்பட்டுள்ளது. குறள் கருத்துக்கள் மனதில் பதியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளன. இறுதி பக்கத்தில் புதிருக்கான சரியான விடை தரப்பட்டுள்ளது. குறளை எளிதாக கற்க வசதியாக அமைந்த புதிர் நுால். – சீத்தலைச் சாத்தன்




