தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தற்கால உரைகளின் வரிசையில் வெளிவந்துள்ளது. தொல்காப்பிய சொல்லதிகாரத்தில் அனைத்துக் கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் எனப் பகுத்து, ஒவ்வொரு இயலுக்கும் எளிய முகப்புரை வழங்கி, நுாற்பாக்களுக்குத் துணைத் தலைப்புகளோடு உரையும் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. திணை, பால், இடம், எண், புறநடை சார்ந்த தமிழ்ச் சொல்லாக்கம், வேற்றுமை வகைகள், பொருள் மற்றும் உருபு மயக்கங்களை உணர்த்தும் வேற்றுமை மயக்கங்கள், விளிமரபு, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் இலக்கணங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன.வேண்டிய இடங்களில் சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர் ஆகியோரின் விரிவான உரை விளக்கங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மாணவர்களுக்குப் பெரிதும் பயன் தரும்.– மெய்ஞானி பிரபாகரபாபு