/ புத்தக மதிப்புரை / உலக மொழிகளில் தமிழ் மொழிச் சொற்கள்
உலக மொழிகளில் தமிழ் மொழிச் சொற்கள்
உலக அளவில் தமிழ் சொற்கள், பிற மொழிகளில் பயன்பட்டு வருவதை எடுத்து கூறும் நுால். மலாய் மொழியில் கப்பல், கடை, கட்டில், திரை, மீசை, தொப்பி, அப்பம், பெட்டி, மாம்பழம் போன்ற சொற்கள் மாற்றமின்றி வழங்கி வருவதை தெளிவாகக் கூறுகிறது. ஜப்பானிய மொழியில் சில சொற்கள் சற்று திரித்து வழங்குவதை கூறுகிறது. வாக்கிய அமைப்பில் ஒற்றுமை இருப்பதை விளக்குகிறது. கிழக்காசியாவில் கொரிய மொழியில் ஏராளமான தமிழ் சொற்கள் நேரடியாக பயன்படுவதை முன்வைக்கிறது. அம்மா, அப்பா, புல் போன்ற சொற்கள் அதே பொருளில் பயன்படுவதை குறிப்பிடுகிறது. சீனம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபு, வியட்னாம் உட்பட, பல மொழிகளில் தமிழ் சொற்கள் வழங்குவதை அறிய தரும் நுால். – ராம்




