/ கவிதைகள் / உன்னுள்ளே ஒரு பொன்னூஞ்சல்
உன்னுள்ளே ஒரு பொன்னூஞ்சல்
மனித வாழ்க்கை நெறிகளை காட்டும் 100 மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கலிப்பா உள்ளிட்ட இலக்கணப்படி கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன. இளம் தலைமுறை இலக்குடன் முன்னேற வழிகாட்டும் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளன. துவக்கத்தில் கல்வியின் அவசியம் பற்றிய கவிதை எளிமையாகவும், மற்றவர்களை மதிக்கவும் கற்று தருகிறது. நட்பு பற்றிய கவிதை ரசிக்க வைக்கிறது. நட்பிற்கு இலக்கணமாக பிசிராந்தையார் – கோப்பெருஞ்சோழன் இடையிலான உறவை குறிப்பிடுகிறது. நேர்மையுடன் வாழ்வது எப்போதும் பெருமை தரும் என விளக்கம் தந்துள்ளது. மதம் அனைவரையும் அழிக்கும் பேராயுதம் என எச்சரிக்கிறது. படிக்கும் ஆர்வத்தை துாண்டும் நுால். – முகில்குமரன்