/ புத்தக மதிப்புரை / உங்கள் தீர்ப்பு என்ன?

₹ 75

இலங்கை இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். வெளியான காலத்தின் நிலை, தமிழ் நடை வாசிப்போர் மனதில் தனித்துவ தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அருணகிரி என்ற உத்தமனை, சோணகிரி, ஏமாளி, பைத்தியம் என உலகோர் சொன்னாலும், அவன் எத்தகைய பெருந்தகையாளன் என்பது, கதையின் முடிவு காட்டுகிறது. ‘பூவரசம் பூ’ சிறுகதை உள்ளத்தை உருக்குகிறது. ‘ஒருத்திக்கு ஒருவன்’ சிறுகதை சிறப்பு சேர்க்கிறது. செல்லாக்காசு சிறுகதை சஸ்பென்ஸின் உச்சம். மிஸ்டர் கந்தசாமி ஒருவித அதிர்வலைகளை, உள்ளத்தில் ஏற்படுத்துவதை உணர முடிகிறது. தொழிலாளியும் முதலாளியும் வேறு வேறு என்பதை காட்டுகிறது. வார்த்தை பிரயோகம், படைக்கப்பட்ட காலத்தை காட்டி மென்சிறகால் வருடும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ