/ உளவியல் / உங்களின் நினைவுத்திறன் எப்படி? (பாகம் – 2)
உங்களின் நினைவுத்திறன் எப்படி? (பாகம் – 2)
நினைவுத்திறனை சோதித்து பார்க்கும் வகையில் அமைந்துள்ள நுால். எளிய புதிர்களை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தில், 25 புதிர்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கது. கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க வழிமுறைகளை தக்க பயிற்சி வழி விளக்குகிறது. மனதை ஒருங்கிணைத்து கவனிப்பதால் நினைவுத்திறன் அபாரமாக உயரும் என சுட்டிக்காட்டுகிறது.ஒவ்வொரு புதிர்களும் படம் மற்றும் செயல் விளக்கங்களால் ஆனது. எளிதில் பயிற்சி செய்யும் அளவு எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சொற்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. வித்தியாசமான புதிர்களால் நினைவுத்திறனை அதிகரிக்க உதவும் பயிற்சி நுால்.– ராம்