/ கவிதைகள் / உலாப்போகும் ஓடங்கள்
உலாப்போகும் ஓடங்கள்
பக்கம்: 140 கவிஞர் முத்துலிங்கம், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் என்பதோடு, சிறந்த கவியரங்கக் கவிஞரும் கூட. அவர் பல கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே இந்த நூல். "வாழ நினைத்தால் வாழலாம் முதல் கவிதையே சமூக, அரசியல் நிகழ்வுகளின் அவலங்களைச் சுட்டிக்காட்டி , பொறுப்புள்ளவர்கள் மனம் வைத்தால், இப்பிரச்னைகளுக்குத் தீர்வு நிச்சயம் உண்டு என்கிறார். மாமியாருக்கு நல்ல மனமிருந்தால், மருமகள் ஸ்டவ் வெடிப்பில் பலியாவது நிகழுமா? என வினவுகிறார். கம்பன், பாரதி, கண்ணதாசன், காமராசர் மருதுபாண்டியர்கள், நடிகர் திலகம் என, 26 தலைப்புகளில் எழுதி, அரங்கு அதிரும் கைதட்டல்களுடன், பல இலக்கியப் பிரபலங்களின் தலைமையில் வாசிக்கப் பெற்ற கவிதைகள் ஒவ்வொன்றும் முத்துலிங்கத்தின் ஆழ்ந்த இலக்கியப் புலமையைப் பறைசாற்றுகின்றன