/ இசை / வாலி 1000 திரையிசைப் பாடல்கள்

₹ 250

முதல் தொகுதி: சத்தியம், சிவம், சுந்தரம், சரவணன் திருப்புகழ் மந்திரம் என்னும் பாடலுடன் ஆரம்பமாகிறது. இரண்டாம் தொகுதி: அம்மா என்று அழைக்காத உயிரில்லையே; அம்மாவை வணங்காது உயர்வில்லையே என்ற பாடலுடன் ஆரம்பம். 1000 இசைப் பாடல்களும் தேன் குடம். கண்ணனே நீ வர காத்திருந்தேன், கண்விழி தாமரை பூத்திருந்தேன் எனும் காதல் பாடல். ஆனாலும், பாண்டவர்கள் சூதாடிப் போன கதை தெரியாதோ, பாஞ்சாலி துயரமெல்லாம் பாவையினம் அறியாதோ? எனும் காப்பிய செய்தி. ஆனாலும், உலகம் சுழல்கிறது; அதன் பயணம் தொடர்கிறது. யார் சிரித்தாலும், யார் அழுதாலும் தன் வழி நடக்கிறது என்ற தத்துவ வரிகள். ஆயினும், வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன், வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலி பூ முடித்தேன் என்ற பக்தி ரசமாயினும், திரை இசைக் கவிஞர் வாலி, தனிப்பெரும் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை