/ ஆன்மிகம் / வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று நுால். போதனைகள், லட்சிய பாதையில் செயல்பாடு குறித்து விரிவாக தரப்பட்டு உள்ளது. மக்கள் சிந்தனையில் மாறுதல் ஏற்படுத்தும் வகையில் உழைத்த பாங்கை அறிய தருகிறது. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் நிலை குறித்து முதலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில் வள்ளலாரின் பிறப்பின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்துகிறது. இறையருள் பெற்ற நிலையை தெளிவுபடுத்துகிறது. தொடர்ந்து வள்ளலார் வாழ்வில் நடந்த செயல்பாடுகள் பற்றிய தகவல்களை எளிய நடையில் தொகுத்து தருகிறது. மேன்மை மிக்க அவரது படைப்புகளின் சிறப்பை தெளிவுபடுத்துகிறது. தேசிய ஒருமைப்பாட்டை முதன்மைபடுத்தும் இந்த நுால், 1966ல் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது. – ஒளி




