/ சிறுவர்கள் பகுதி / வானவாசிகள்
வானவாசிகள்
பறவைகள் பற்றிய அறிவைத் தரும் அரிய நுால். குழந்தைகள் படிக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. சிக்கலற்ற சிந்தனையை துாண்டும், 15 தலைப்புகளில் தகவல்கள் அமைந்துள்ளன. உயிரினங்கள் எப்படி உருவாயின என்ற கேள்வியுடன் துவங்குகிறது. அடுத்து பறவைகள் பலவிதம் என சிறகை விரிக்கிறது. தொடர்ந்து, என்னால் பறக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பி சிந்திக்கும் தகவல்களை தருகிறது.பறவையியல் பற்றி தெளிவாக, படங்களுடன் தரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அறிவூட்டும் நோக்கத்தை புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளும் நிறைவேற்றுகின்றன.– மலர்