/ வாழ்க்கை வரலாறு / வேலுநாச்சியார்

₹ 180

வீ ரமங்கை வேலுநாச்சியாரின் துணிச்சலான வாழ்க்கை வரலாற்று நுால். இரண்டு பகுதியாக அமைந்து உள்ளது. இறுதியில் சுத்தானந்த பாரதியின் நாடகத்தை அடியொற்றி அமைந்துள்ளது. வேலுநாச்சியாரின் பிறப்பு, வளர்ப்பு, பன்மொழியில் திறமை, போர்க்கருவிகளை கையாளும் பயிற்சி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைதர் அலியின் உதவி பெற, உருது மொழி கற்றதை பதிவு செய்துள்ளது. முத்துவடுகநாதரை திருமணம் செய்து, பட்டத்து ராணி யான வரலாற்றை விவரிக்கிறது. கணவர் இறந்த போது எடுத்த சபதத்தின்படி, சிவகங்கைச் சீமையை மீட்டது பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தீரம் விவரிக்கப்பட்டுள்ளது. வேலுநாச்சியாரின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை