/ தீபாவளி மலர் / விஜய பாரதம் தீபாவளி மலர் 2017!
விஜய பாரதம் தீபாவளி மலர் 2017!
வார இதழான விஜய பாரதம், ஆண்டுதோறும் தீபாவளி ஸ்பெஷல் இதழை வெளியிட்டு, ஆன்மிக அன்பர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.இந்த ஆண்டும் கவனமாகவும், சிறப்பாகவும் ஆன்மிக கட்டுரைகளை தொகுத்து வழங்கி உள்ளனர்.காஞ்சி பெரியவர் அருள் வழங்கும் படத்துடன் துவங்குகிறது, விஜய பாரதத்தின் பயணம்.‘இலங்கை தீவில் ராமாயண தீபாவளி’ என்ற கட்டுரை, பல அரிய தகவல்களை தருகிறது.சிறுகதைகள், ஜி.எஸ்.டி., வரி பற்றிய கட்டுரை, ‘மக்கள் மனதில் மக்கள் திலகம்’ என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டுரை, கவிதை மற்றும் சிறுவர்களுக்கான புதிர் பக்கம் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இதழ் வெளிவந்துள்ளது.