விஜயபாரதம் தீபாவளி இதழ் 2022
குல தெய்வம், கிராம தெய்வம், எல்லைச்சாமிகள் குறித்த சிறப்பிதழாக மலர்ந்துள்ள விஜயபாரதம் தீபாவளி மலர் வண்ணமயமாக தொடுக்கப்பட்டுள்ளது. மலரில், தருமை ஆதீனம், நான்குநேரி வானமாமலை மடம் ஜீயர், கோவை சின்மயா மிஷன் ஸ்வாமினி ஆகியோரின் தீபாவளி ஆசியுரை அலங்கரிக்கிறது. குல தெய்வங்கள் பற்றி விளக்கும் அட்டைப்படம் அட்டகாசமாக அமைந்துள்ளது.குல தெய்வ வழிபாடு குறித்து விளக்கங்கள், குல தெய்வமே காப்பு, கிராம தேவதையே குல தேவதை, குல தெய்வம் அறிய சில வழிமுறைகள், குல தெய்வ குற்றம், ஊரை ஒருங்கிணைத்த குல தெய்வம் எனும் பொருள்களில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. பொருத்தமான படங்களும் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் பேட்டி, ஆரியக் கடவுள், திராவிடக் கடவுள் குறித்த சிறப்புக் கட்டுரையும் முக்கிய இடம் பிடித்துள்ளன. கவிதைகள், ஆன்மிக செய்திகள் என மலரில் இனிய அம்சங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. இனிய பண்டிகை கொண்டாட்டத்துக்கு, வண்ணப்பொலிவுடன் வாழ்த்துரைக்கும் மலர்.– மதி