/ கட்டுரைகள் / விதுர நீதி
விதுர நீதி
மகாபாரதத்தில் விதுரர் அளித்த போதனைகளை விளக்கும் நுால். சமஸ்கிருத மூலத்தில் 596 ஸ்லோகங்களாக விரிந்திருப்பதை, எட்டு அத்தியாயங்களில் விளக்குகிறது. பாண்டவர்களுக்கு நிலம் தர முடியாது என்று துரியோதனன் உரைத்தான். அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் இருந்த திருதராஷ்டிர மன்னன் கவலை தீர சொல்லிய போதனைகளே விதுர நீதி.ஒருவர் சிறந்த மனிதராக வாழ வழிமுறைகளை சொல்கிறது. உலகியல், அரச நீதி, நன்னடத்தை, குடும்பம், சமுதாயம், தர்மம் என மன்னனுக்கான போதனைகளும், சாதாரண மனிதனுக்கு உரிய வாழ்க்கை நெறிகளும் கூறப்பட்டுள்ள நுால்.– புலவர் ரா.நா