/ கட்டுரைகள் / அறிஞர்களின் பொன்மொழிகளும் சுவையான விளக்கங்களும்
அறிஞர்களின் பொன்மொழிகளும் சுவையான விளக்கங்களும்
பொன் மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துக்களை விளக்கும் நுால். அகந்தையை விட்டு இறைவனை வழிபட வழிகாட்டுகிறது.இறை வழிபாடு, பிறருக்கு உதவுதல், அன்பு, ஒழுக்கத்துடன் வாழ்தல் போன்ற அடிப்படை கருத்துக்களை நவில்கிறது. வெற்றி பெற கடின உழைப்பு வேண்டும் என்ற கருத்தை இதமாக எடுத்துரைக்கிறது. பேச்சைக் குறைத்து செயலில் இறங்கினால், வெற்றி நிச்சயம் என வலியுறுத்துகிறது. மனம் திறந்து சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிடுகிறது. ஆசை எதனால் ஏற்படுகிறது என்பதை விளக்குகிறது. அன்பு, பணிவு, ஒழுக்கம், நேரம் தவறாமை போன்றவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வலியுறுத்தும் மேன்மை நிறைந்த நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்