/ கட்டுரைகள் / யாதுமாகி
யாதுமாகி
வாழ்வில் அறநெறிகளை கடைப் பிடித்து வாழ வலியுறுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். இயற்கை படைப்பை நேசித்தால், கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை என்கிறது. பக்தியில் மறைந்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. கல்வி வாழ்க்கையில் உயர்வை தரும் என்பதை கதை வழியாக கூறுகிறது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சம உரிமையின் அவசியத்தை சொல்கிறது. பணத்தை கையாளும் முறை குறித்தும், ஊதாரித்தனம் பற்றியும் எச்சரிக்கிறது. எவ்வளவு செல்வத்தை தேடி சேர்த்தாலும், கொடுத்து பகிர்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை சொல்கிறது. மனித மனங்கள் வெற்றிடமில்லாமல், பண்பு நெறிகளாலும், சிந்தனை ஓட்டத்திலும் நிரப்ப வலியுறுத்துகிறது. இன்னல்களை சந்தித்து சாதித்தவர்களை முன்னுதாரணமாக சொல்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மைய கருத்துள்ள நுால். – டி.எஸ்.ராயன்