/ புத்தக மதிப்புரை / யாவர்க்குமாம் ஒரு நுாலே

₹ 100

வாழ்க்கைத் தத்துவத்தை மகான்களின் செயல்பாடுகள் வழியாக மேற்கோள் காட்டி விளக்கும் கவிதை நுால். மண்ணில் சிறப்பாக வாழ வழி காட்டும் சிந்தனைக் களஞ்சியமாக உள்ளது. இறைவனிடம் வேண்டுகோள் விடுக்கும் போது, உள்ளக் குமுறல்களை உள்ளது உள்ளபடி கூற வேண்டும் என்கிறது. திருக்குறளே உலகப் பொதுமறை என குறிப்பிடுகிறது. புறம் பேசுவோரை சமூகம் புறந்தள்ளும் என்கிறது. இலக்கண விலங்கை விலக்கிய தனித்திறன் உடையவர் மகாகவி பாரதி என்கிறது. இலக்கிய உலகை இனிதுறத் துலக்கியதை புகழ்மாலையாக தொடுக்கிறது. தொழிற்சங்க தலைவர் சிங்காரவேலர் தன்னடக்கம், தனிப் பெருமையை குறிப்பிடுகிறது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை