Advertisement

எதிர்நீச்சல்


எதிர்நீச்சல்

₹ 330

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாற்றங்களுக்கு விதை போடும் பெண்களை அறிமுகம் செய்யும் நுால். விளையாட்டு, இயற்கை பாதுகாப்பு என துவங்கி, பல துறையிலும் சாதிப்போர் பற்றிய குறிப்புகள் உள்ளன.இந்த புத்தகத்தில், 53 பேர் பற்றிய விபரங்கள் உத்வேகமூட்டும் விதமாக வடிக்கப்பட்டுள்ளன. கர்ப்ப காலத்திலும் மனம் தளராது தடகள போட்டியில் பங்கேற்று நம்பிக்கையுடன் ஓடி, உலகின் கவனத்தை ஈர்த்த அமெரிக்க பெண் பற்றி முதல் கட்டுரை அமைந்துள்ளது. ஒவ்வொருவர் பற்றியும் குறிப்புகளை மட்டும் தராமல், இலக்கிய சுவை பொங்க வரையப்பட்டுள்ளது.உலகில் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் இத்தனை பேர் வலம் வருகின்றனரா என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தகவல்கள் அமைந்துள்ளன. பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டி சாதனை படைக்கத் துாண்டும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்