Advertisement

கணித மஞ்சரி


கணித மஞ்சரி

₹ 460

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

கணிதவியல் தகவல்களை கூறும் நுால். புள்ளி துவங்கி, கோலங்கள் வரை பல கோணங்களில் விளக்குகிறது. தமிழ் இலக்கியங்களில் கணிதக் கோட்பாடுகள் குறித்து அறிய தருகிறது. திண்ணை பள்ளிகளில் கணித திவாகரம், கணக்கதிகாரம் கற்பிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளது. இயற்கணித முறைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என சொல்லி தருகிறது. கோலங்களில் கணிதம், பிதாகரஸ் தேற்றம், புதிர் கணக்கு தீர்வுகள், நாற்கரத்தின் பரப்பு, இயற்கணித முற்றொருமைகள் என செய்திகளை அள்ளி தருகிறது. கோலக்கலை தமிழர் வாழ்வில் ஆன்மிக நம்பிக்கையோடு ஊறி விட்டதை குறிப்பிடுகிறது. இயற்கையில் சமச்சீர் என்பது கண்ணையும், கருத்தையும் கவர்வதை விவரிக்கிறது. கணிதவியல் பற்றி அறிந்துகொள்ள உதவும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்