Advertisement

நோ யுவர் பாடி - பாகம் 1 (ஆங்கிலம்)


நோ யுவர் பாடி - பாகம் 1 (ஆங்கிலம்)

₹ 400

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மனித உடலின் இயல்புகள், நோய்கள், மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த அம்சங்களை எளிய முறையில் விளக்கும் விரிவான புத்தகம். குழந்தைகளும், பொதுமக்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோரும் பயனடையும் வகையில், சுலபமான கேள்வி -– பதில் வடிவத்தில் அமைந்துள்ளது.ஒவ்வொரு உடல் உறுப்பை யும், அதன் செயல்பாடுகளையும், அவை தொடர்புடைய நோய்களையும், 15 பிரிவுகளில் விவரிக்கிறது. உணவு ஒவ்வாமை, ரத்த வகைகள், மூளை புற்றுநோய், நம்மை தாக்கும் தோல் பிரச்னைகள், மாரடைப்பு, நோய் எதிர்ப்பு, போன்ற நுாற்றுக்கணக்கான கேள்விகளுக்கு எளிய பதில்களை அளிக்கிறது.சளி, தும்மல், துாக்கத்தின் முக்கியத்துவம், ஜீரணப் பிரச்னைகள், கண் பராமரிப்பு, முதலுதவி அறிவுரை, மற்றும் மனநலத்துடன் கூடிய மருத்துவ விளக்கங்களை கொடுக்கிறது. முக்கியமாக, மருத்துவ அறிவியல் மற்றும் தினசரி வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.மருத்துவ ரீதியாக தெளிவான விளக்கங்கள், படிக்க எளிதான கேள்வி – பதில் வடிவம், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டி, ஆரோக்கிய பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் நடைமுறைப் பாடங்கள் இதன் சிறப்பம்சங்களாக உள்ளன.எழுத்து பாணி வாசிக்க எளிதாகவும், புரிந்துகொள்ள சுலபமாகவும் உள்ளது. மொத்தத்தில் இந்த புத்தகம் ஒரு சிறந்த மருத்துவ வழிகாட்டி மட்டுமல்ல, மனித உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு நல்ல தொடக்கமாகவும் திகழ்கிறது. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது மிகவும் பயனுள்ள புத்தகம்.– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்