Advertisement

மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு


மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

"மேயோ கிளினிக் கைடு டு செல்ப் கேர் என்னும் ஆங்கில நூலின் நான்காவது பதிப்பின் தமிழாக்கம் முதல் நூலான உடல் நலக் கையேடு. இந்த நூலில் அவசர சிகிச்சை, பொதுவான நோய்க்குறிகள், பொதுவான பிரச்னைகள், குறிப்பிடத்தக்க அறிகுறிகள், மனநலம், ஆரோக்கியமாக வாழ்தல், உடல்நலமும் பணியிடமும், ஆரோக்கியமான நுகர்வோர் என்னும் எட்டுப் பிரிவுகளில் பொதுவான மருத்துவ பிரச்னைகள் பற்றி எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில், ஏராளமான தகவல்கள் அளிக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, அவசர சிகிச்சை பகுதியில், மூச்சுத் திணறல் அல்லது மாரடைப்பு ஏற்பட்டுள்ள ஒருவருக்கு எவ்வாறு உதவுவது, பூச்சிக்கடிகள், ஒவ்வாமையின் எதிர்விளைவுகள் போன்றவற்றை கையாளும் முறை மற்றும் அவை ஏற்படாமல் தவிர்க்க தன்கவனிப்பு குறிப்புகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.இந்த நூலின் மிகப் பெரிய பகுதி பொதுவான பிரச்னைகள் பகுதி. இப்பகுதியில் கண், காது, மூக்கு, தோல், வயிறு, தொண்டை, முதுகு, கை, கால்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் குறித்து விளக்கமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இரண்டாவது நூல் "மேயோ கிளினிக் ஆன் மேனேஜிங் டயபடிஸ் என்னும் ஆங்கில நூலின் இரண்டாவது பதிப்பின் தமிழாக்கம். இந்த நூலில் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் வழிகள், தீவிர நோய்ச் சிக்கல்களுக்கு ஆளாக கூடிய அபாயத்தைக் குறைப்பது மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தனிச்சிறப்பான ஆலோசனைகள் போன்றவை எளிமையாகக் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், நீரிழிவு நோய் தொடர்பான அடிப்படைத் தகவல்கள் தொடங்கி, நீரிழிவு நோயின் அபாயங்கள், நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கம், நோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் உட்பட பல விஷயங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும், நீரிழிவு நோய் சம்பந்தமான சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்

இதையும் பாருங்கள்!