இறை பக்திக்கு உகந்த தோத்திர புத்தகம். ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளி ஒன்பது பகுதிகளாகவும், சித்தி, புத்தி தேவிக்கு தலா ஒரு அஷ்டோத்தர சத நாமாவளியும் உள்ளன. ஸ்ரீ சுப்பிரமணியர் அஷ்டோத்தர சத நாமாவளியும், ஸ்ரீ சண்முகரின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு அஷ்டோத்தர சத நாமாவளியாக ஆறுமுகத்திற்கும் தனித்தனியாக உள்ளன. வள்ளி, தேவசேனாவுக்கு தனித்தனி அஷ்டோத்தர சத நாமாவளி உள்ளது. ஸ்ரீ ராமருக்கு ஒரு அஷ்டோத்தர சதா நாமாவளி உள்ளது போல், ஸ்ரீ சீதாதேவிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் தனித்தனி அஷ்டோத்தர நாமாவளிகள் தரப்பட்டுள்ளன. பூஜை புனஸ்காரங்களுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ள கதம்ப மாலை. – டாக்டர் கார்முகிலோன்
சகல ஐஸ்வர்யங்கள் அளிக்கும் அஷ்டோத்தர கதம்ப மாலை
-
வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
-
வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
-
வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
-
அதிர்ச்சியூட்டும் இலஞ்சம்
நிவேதிதா பதிப்பகம், 2, எப்3, தத்தாத்ரேயா அபார்ட்மென்ட்ஸ், விருகம்பாக்கம், சென்னை –
ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், வேண்டுதல்கள் லஞ்சம் இன்றி நிறைவேற்றப்பட்டாலே எந்த இலவசங்களையும் அரசு தர வேண்டியதில்லை. ‘லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும்’ என பலமுறை நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்தாலும் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. லஞ்சம் தர மறுத்தவர்கள், வாங்கியோரை சிறைக்கு அனுப்பியவர்கள், அப்பணியைச் செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒப்பாவர் என்கிறார் இந்நுாலாசிரியர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற சிலர், லஞ்சம் தர மறுத்து நேர்மையை நிலை நாட்டிய நீதிமான்கள், லஞ்சம் சம்பந்தமான பிற செய்திகள் ஆகியவை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். – சிவசு
-
இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு வாழ்வையும், சாதனையையும் எளிமையாக தரும் நுால். பள்ளிப் படிப்பு முடிக்காத நிலையிலும் சுய முயற்சியால் முன்னேறியதை எடுத்துக் கூறுகிறது. உணவகத்தில் வேலை பார்த்து, அந்த பணத்தில் ஆங்கிலேயரின் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கியதை குறிப்பிடுகிறது. அதை பிரித்துப் போட்டு வேலை செய்ததை அறிந்தது குறித்தும் விவரிக்கிறது. பஸ் மற்றும் மோட்டார் தொழிலில் முன்னோடியாக விளங்கியதை எடுத்து கூறுகிறது. ஷேவிங் பிளேடு, மின்சார மோட்டார், ரேடியேட்டரில் நீண்ட நாள் தண்ணீர் இல்லாமல் ஓட்டுவதற்கான பொருள் என கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியதை விவரிக்கிறது. தொழில், வேளாண் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியது குறித்த நுால். – முகிலை ராசபாண்டியன்
-
பலதரப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் தொடர்பால் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து தரும் நுால். சென்னையில் எம்.எல்.ஏ., ஹாஸ்டல் எவ்வாறு பயன்பட்டது என்பதை விளக்குகிறது. வாழ்க்கைக்குப் பணம் தேவையில்லை. வசதிக்குத்தான் பணம் தேவை; வாழ்க்கைக்கு வாசிப்பு அவசியம் என்கிறது வயிற்றுப் பசி, அறிவு பசிக்கு உள்ள வித்தியாசத்தை கூறுகிறது. கட்சிகளுக்கும் பல்லாயிரம் கோடி அசையும் அசையா சொத்துக்கள் இருப்பதை குறிப்பிடுகிறது. கல்வி நிலையங்களில் படிக்கும் சூழல் நிலவினால் மாணவர்கள் சினிமா நடிகர்களை தேடி போக மாட்டார்கள் என்கிறது. அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நுால். – வி.ராமலிங்கம்
-
ஏன்சியன்ட் சிவிலைசேஷன் ஆன் தி பேங்க்ஸ் ஆப் டூ ரிவர்ஸ் (ஆங்கிலம்)
கங்கை மற்றும் நைல் நதி நாகரிகம் குறித்த செய்திகளை தரும் நுால். கங்கை உற்பத்தியாவதில் இருந்து தொன்மை வரலாறு, பண்பாடு விவரிக்கப்பட்டிருக்கிறது. நதியை தெய்வமாக வணங்கும் சடங்குகள், கும்பமேளா குறித்தும் கூறப்பட்டுள்ளது. நதியை பண்பாட்டு ரீதியாக விளக்கி, மனித மனதில் எப்படி வேரூன்றுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. கங்கை நதியோடு கலக்கும் கிளை நதி விபரமும், பாய்ந்து வளப்படுத்தும் பகுதிகள் பற்றியும் தரப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் தொன்மையும், வரலாறும், பண்பாடும் நாகரிகத்தின் அடித்தளமும் தெளிவாக கூறப்பட்டுள்ள நுால். – ஊஞ்சல் பிரபு
-
வாழ்க்கை துணையை இழந்தோர் மனதில் பதிக்க வேண்டிய யோசனைகளை, தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நுால். குழந்தைகளின் தவறான செயல்களுக்காக கோபம் கொள்ள வேண்டாம்; நுாலகம் சென்று படித்தால், அங்கு வரும் மூத்த குடிமக்களின் நட்பு கிடைக்கும்; மாலை நேரம் உலாவுவது நல்ல உடற்பயிற்சியாக அமையும். இது போன்று வழிகாட்டுகிறது. ஆண்கள் செய்யும் வேலைகளை, பெண்களும் செய்ய வேண்டும். படிக்கும் பழக்கமானது ஆனந்தம், அமைதியை தரும்; முதுமை வந்தாலும், கடந்த கால நினைவுகளை எண்ணினால், ஆறுதலும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவிஞர்கள் வாலி, கண்ணதாசன் மேற்கோள்களுடன் விளக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்