Advertisement

சுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா? சூழலா?


சுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா? சூழலா?

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வில் சுக, துக்க நிர்ணயத்தை ஆராயும் நுால். உணவு முறையை பின்பற்ற மனம் தான் முழுக்காரணம் என்கிறது. வறுமை, இன்னல்களை கடந்து முன்னேற மனதால் இயலும் என்கிறது. ஐம்புலன்களும் சுகம், துக்கத்தை அனுபவிக்க மனமே காரணம் என்கிறது. நட்பு மற்றும் பணத்திற்காக விளையாடும் மன இலக்கணத்தை விளக்குகிறது. விருப்பு வெறுப்பற்றவர்களால் தான், விருந்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்கிறது. ஐம்பூதங்கள் கற்றுத்தரும் உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன. சுயமதிப்பில் இருக்கும் போதை முட்டாளாக்கி கஷ்டப்படுத்தும் என விளக்குகிறது. குரு – சீடன் முறையில் விளக்கம் தரும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்