அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் எனும் கடலோரக் கிராமம். சிவாலயமும், வைணவக் கோவிலும், முகம்மதியப் பள்ளிகளும் அருகருகே இருந்தன. போட்டி பொறாமையின்றி அமைதியுடன் வாழ்ந்து வந்த தமிழகத்தின் முதலாவது சமத்துவபுரம் அந்தத் தீவு....