/ வர்த்தகம் / வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் – மூன்று பாகங்கள்
வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் – மூன்று பாகங்கள்
இளைஞர்கள் புதிய தொழில், ஏற்றுமதி நிறுவனங்கள் துவங்க வழிகாட்டும் வகையில் மூன்று நுால்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. வெற்றிகரமாக 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் என்ற புத்தகம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து, மேலும் மூன்று பாகங்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொன்றிலும் 100 தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. மூன்று பாகங்களிலும் 300 தொழில் விபரங்களை அறியலாம். சாதாரண கார் ஷெட்டில் புத்தகம் விற்ற பிளிப்கார்ட், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்த விதம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆர்வமுடன் படித்தால், இளைஞர்கள் சுயமாக தொழில்களை துவங்கலாம் என நம்பிக்கை தரும் நுால்.– -ஜி.வி.ஆர்.,