/ ஆன்மிகம் / 12 ஜோதிர்லிங்க தரிசனம்

₹ 110

சிவ மகா புராணத்தின்படி லிங்கத்தின் வடிவங்களை விளக்கும் நுால். ஆதிசங்கரர் அருளிய ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் சோமநாதர், மல்லிகார்ஜுனர், மஹாகாளேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், வைத்தியநாத், பீமாசங்கர், ராமநாதர், நாகேஸ்வரர், விஸ்வநாதர், த்ரயம்பகேஸ்வரர், கேதாரநாதர், கிரீஸ்னேஸ்வரர் என ஜோதிர்லிங்க தலங்களை குறித்துள்ளதை தெரிவிக்கிறது. அவை அமைந்துள்ள இடங்கள், புராண வரலாறு, வழிபாட்டு முறைகள், கட்டமைத்தவர் வரலாறு, வழிபடுவோர் அடையும் பயன்கள் நிரல்படுத்தப்பட்டு உள்ளன. லிங்கங்களின் வடிவம் படங்களாகவும் தரப்பட்டுள்ளன. காசி யாத்திரை முறையாக செய்வதையும் அறிய தரும் நுால். – புலவர் சு.மதியழகன்