/ கதைகள் / ஒரு கடற்கன்னியின் சாகசக் கதை
ஒரு கடற்கன்னியின் சாகசக் கதை
வண்ணப் படங்களுடன் கண்ணைப் பறிக்கும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால். கொழும்பு நகரம் பற்றி எரிந்ததையும், பெற்றோரை காணாமல் பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி சிறுவனின் பரிதாபத்தையும் ‘அன்பைத் தேடி’ கதை சொல்கிறது. நடந்த அவலங்கள் கண்ணீரை வரவழைக்கிறது.மற்றொரு கதையில் காட்டை விட்டு செல்ல விரும்பும் கங்காருவுக்கு, மற்ற விலங்கினங்கள் சொல்லும் புத்திமதி மனிதன் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது. புதிரும், பதிலும் வயது வாரியாக பிரித்து கேள்வி – பதிலாக இருப்பது அருமை. அரிசி என்ற வார்த்தையில் இருந்து கண்டறியும் இரண்டு சொற்கள் அரி மற்றும் சிரி என சுவாரசியம் ஊட்டுகிறது. சிறுவர், சிறுமியர் படிக்க ஏற்ற புத்தகம். – சீத்தலைச் சாத்தன்