/ முத்தமிழ் / ஆழ்வார்களின் ஆராமுதம்
ஆழ்வார்களின் ஆராமுதம்
பக்கம்: 248 பன்னிரு ஆழ்வார்கள் படைத்த பாடல்கள் அனைத்தும் நாலாயிர திவ்ய பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தத் திருப்பாடல்களை ஆழ்வார்களின் ஆராமுதமாகக் கருதி ஆய்வு செய்து முடித்துள்ளார், முனைவர் பா.பொன்னி. ஆழ்வார்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள உறவு நிலைகளையும், உணர்வு நிலைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார். இறைவன் உலகத்துடன் தொடர்பு உடையவனாகவும், தொடர்பு அற்றவனாகவும் விளங்கும் சிறப்பு நிலையினையும், மடல் என்னும் இலக்கிய வடிவத்தினையும் சிறப்பாக விளக்கியுள்ளார் . ஆழ்வார்கள் திருமாலின் திருப்பெயர்களாக நூற்று நாற்பதொன்றினைக் குறிப்பிட்டுள்ளதையும் அவற்றின் விளக்கங்களையும் தொகுத்துத் தந்துள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.