/ புத்தக மதிப்புரை / ஐந்திணைச் சிறப்பிதழ்
ஐந்திணைச் சிறப்பிதழ்
பழந்தமிழரின் திணை வாழ்க்கை முறையை விளக்கி, உயிரின பன்மய சிந்தனையை முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். திணை மெய்யியல் என்ற தலைப்பிலான கட்டுரை, பல்லுயிரினம் சார்ந்த வாழ்க்கை முறையை பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக கோட்பாடாக வகுத்து காட்டுகிறது. இலக்கியங்களில் இருந்து, சங்கம் தெரபி என்ற உளவியல் சிகிச்சை முறையை செதுக்கி, அதை அணுகும் முறை பற்றி கூறுகிறது. தமிழக பாலை நிலங்கள், நதிநீர்ச்சூழல், திணைமொழி எடுத்துரைப்புகள், கீழடி மண்ணின் காடுகள் உட்பட பல தலைப்புகளில், சுற்றுச்சூழலை பேணும் வாழ்க்கை முறை சார்ந்த கருத்துகள் தரப்பட்டுள்ளன. பல்லுயிரினங்களுடன் வாழ்வதற்கு உகந்த தத்துவ நடைமுறையை வகுக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். – மதி




