/ வாழ்க்கை வரலாறு / அக்பர் மாபெரும் முகலாயப் பேரரசர்
அக்பர் மாபெரும் முகலாயப் பேரரசர்
செயல்பாடுகளால் சாம்ராஜ்ஜியத்தை சிறக்க வைத்த மன்னர் அக்பரை பற்றிய நுால். உலக வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளதை அறியத்தருகிறது.மக்கள் மனதில் இடம் பெற்றதால் பேரரசராக உயர்ந்திருந்ததை தக்க சான்றுகளுடன் தருகிறது. அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் அக்பர் பின்பற்றிய சிறப்பான நடைமுறைகளை விவரிக்கிறது. வரலாற்று செய்திகள் 29 அத்தியாயங்களாக புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. பாலைவனத்தில் பூத்த ரோஜா, புதிய வானம், புதிய பூமி, பயமறியா இளங்கன்று போன்ற கவித்துவம் நிறைந்த தலைப்புகள் ஆர்வத்தை துாண்டுகின்றன. பேரரசர் அக்பரின் கலாப்பூர்வமான வாழ்வை அறியத்தரும் நுால்.– மதி