/ கட்டுரைகள் / பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி
பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி
அகில இந்திய வானொலி தமிழ் ஒலிபரப்பு பற்றிய வரலாற்று களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். நேயர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் என பல்வேறு தரப்பின் பார்வையில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.புத்தகத்தில் 46 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நிகழ்ச்சிகளை அலசுகின்றன. வானொலி ஒலிபரப்பின் நுாற்றாண்டு நிறைவு கொண்டாட்டத்தை ஒட்டி வரலாறாக பதிவாகியுள்ளது.தமிழகத்தில் ஒரு தகவல் தொடர்பு கருவி உருவாக்கிய மாற்றத்தின் சாராம்சமாக உள்ளது. வானொலி நிகழ்ச்சிகள் தமிழக வளர்ச்சியுடன் இணைந்திருந்த விபரங்களை சுவாரசியமாக சொல்கிறது. புதிய கோணங்களில் தமிழ் ஒலிபரப்பு வரலாற்று தகவல்களை பதிவு செய்துள்ள அரிய நுால்.– மதி




