/ புத்தக மதிப்புரை / அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2026

₹ 200

அருள் தரும் ஆன்மிக செய்திகளுடன் மலர்ந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். ஆச்சாரியார் அருளிய அறநெறிக்கதைகளும் இடம் பெற்றுள்ளன. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதிதீர்த்த சுவாமிகளின் தீபாவளி அருளாசியுடன் துவங்குகிறது. பீடத்தை அலங்கரிக்கும் தோரண கணபதி, ஸ்ரீசாரதாம்பாள் மற்றும் குருக்களின் படங்கள் வண்ணமயமாக ஜொலிக்கின்றன. தர்மம் தலைகாக்கும் என்ற செய்தி தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த அஷ்டோத்தரசத நமாவளிகளில், 22 திருநாமங்களுக்கு விளக்கம் எளியநடையில் தரப்பட்டுள்ளது. அவை அழகிய படங்களுடன் அமைந்து கவர்கின்றன. சாக்த வழிபாட்டு கீர்த்தனைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த எச்சரிக்கை தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆன்மிகச் செய்திகளை இனிமையுடன் தந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். – விநா