/ கவிதைகள் / அன்பென்னும் பயிர்

₹ 90

அன்பின் உயர்வையும், இயற்கையின் எழிலையும், தலைவர்களையும் பாடும் மரபுக்கவிதை நுால். எளிதாய் படித்து மகிழும் வகையில் சந்தம் மிக்க விருத்தப்பா மரபில் உள்ளது. தமிழ் மொழியை வாழ்த்துகிறது. அன்பிலே ஆழ்ந்த தங்கை மீதான வாழ்த்தில் பாசத்தின் நேசம் பொங்குகிறது. குறளின் குரலும், குயிலின் குரலும் கேட்பது இனிக்கும் என பாடுகிறது. திருக்குறளை தேசிய நுாலாக்கவும், அறியாமை இருள் அகற்றவும், ஜாதி, மத சடங்குகள் ஒழியவும் வேண்டுகிறது. யமுனை நதியின் காதல் களஞ்சியம், கடவுள் காதல் கமழும் வீடு என தாஜ் மகாலை போற்றுகிறது. காந்தி கணக்கு, ஆனந்த கண்ணீர் போன்ற தலைப்புகளில் கவிதை ஆறு பாய்ந்து ஓடுகிறது. மரபுக்கவி வயலில் அன்பென்னும் விளைச்சல் காணும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை