/ கட்டுரைகள் / இந்து, இஸ்லாம், கிறிஸ்துவத்தில் முத்தான சிந்தனைகள்
இந்து, இஸ்லாம், கிறிஸ்துவத்தில் முத்தான சிந்தனைகள்
மதங்களின் போதனைகள் அன்பு, நம்பிக்கை அடிப்படையிலானது என உணர்த்தும் நுால். அருளாளர் உபதேசங்கள் உண்மை, ஒழுக்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதை எடுத்துரைக்கிறது. யார், எங்கும், எதிலும் பரமாத்மாவை காண்கிறாரோ, அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கிறான் என்ற ஹிந்து மத தத்துவத்தை விளக்குகிறது.இறை நம்பிக்கையும், பெற்றோரை பேணுதலும் இன்றியமையாதது என இஸ்லாம் போதிப்பதை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவ மதமும், அன்பையே அடிப்படையாகக் கொண்டு இருப்பதை அறிய வைக்கிறது. இறைவனுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்ற கருத்தை புரிய வைக்கிறது. முத்தான சிந்தனைகளை தாங்கி நிற்கும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்