/ அறிவியல் / அண்டவெளியில் மிதக்கும் அழகிய கிரகங்கள்
அண்டவெளியில் மிதக்கும் அழகிய கிரகங்கள்
பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் நுால். இயற்கை பேராற்றல் எப்படி எல்லாம் இயங்குகிறது; ஒவ்வொன்றும் அதன் உள்ளே ஒடுங்கும் அறிவியல் ஆச்சரியத்தை அழகிய நடையில் தருகிறது.லட்சக்கணக்கில் பால் வீதி மண்டலங்கள் இருப்பதை பேராச்சரியத்துடன் அறியத் தருகிறது. சூரிய மண்டலத்துக்கும் அப்பால், அண்டவெளியில் சூரியன் போல் கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளதை எடுத்துக் கூறுகிறது. விண்ணில் கருந்துளை, வெண்துளை, புழுத்துளை போன்ற பிரமிக்க வைக்கும் தகவல்கள் நிறைய உள்ளன. கருந்துளை கற்பனைக்கும் எட்டாததாக உள்ளது. சூரியனிலிருந்து வெடித்து புறப்பட்ட எரிமலைக் குழம்பு தான் பூமியும், கடலும் என அறிய வைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்