/ சிறுவர்கள் பகுதி / அஞ்சலியும் வேப்ப மரமும்
அஞ்சலியும் வேப்ப மரமும்
சிறுவர் – சிறுமியரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடவுள் தந்த வரம் துவங்கி, சூர்யா சொன்னா கேட்கணும் என்பது வரை, 32 தலைப்புகளில் உள்ளன. கவரும் வகையிலான பாத்திரங்களை உருவாக்கி கதைகள் எழுதப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கதையும், நம்பிக்கை ஊட்டும் அறத்தை உடையன. தாழ்வு மனப்பான்மையை போக்கி, உற்சாகமாக பயணம் செய்ய துண்டும் வகையில் அமைந்துள்ளன.விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டுள்ளன. எளிய நடையில் அறக்கருத்துக்களை சிறுவர் மனதில் பதிக்கும் சிறுகதை தொகுப்பு நுால்.– ராம்