/ ஆன்மிகம் / ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்
ஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்
அற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை. நாயுருவி என்ற கதையில், சுகுமார், செல்லாயி வாழ்க்கை மாற்றங்கள், கடைசியில் இருவரும் அல்லல்பட்டு, கிராமத்தில் ஊழலற்ற சேவை செய்யும் போது, பழைய காதலர்கள் மீண்டும் இணைவதை ஆசிரியர் கூறுகிறார்.வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம், வசதி வாய்ந்த வாழ்க்கை மட்டும் மன நிம்மதி தராது என்பதை வெளிப்படுத்தும், அனுபவச் சுழல்கள் பலவிதமாக பல கதைகளில் உள்ளன.படித்த, வசதி வாய்ந்தவர்கள் மனப்போராட்டத்தில் ஈடுபடும் சமயத்தில், இக்கதைகள் தங்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் வியப்பதற்கு இல்லை.




