/ வாழ்க்கை வரலாறு / அன்னை இந்திரா
அன்னை இந்திரா
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம். இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்ட பெரோஸ் காந்தியுடன் காதல் ஏற்பட்டு திருமணத்தில் நிறைவுறுகிறது. இந்திரா என பெயரிடப்பட்டது பற்றி சுவாரசியமான தகவல் உள்ளது. அந்நியத்துணி பகிஷ்காரத்தில் பிஞ்சு வயதிலே இருந்த துணிவு சிலிர்ப்பு தருகிறது. நேருவின் முதன்மை செயலர் எம்.ஓ.மத்தாய் பற்றிய ருசிகர தகவலும் உள்ளது. காங்கிரஸ் தலைவராக இருந்த போது இந்திரா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. ஆட்சியில் சீர்திருத்தங்கள், அவசரநிலை பிரகடனம் குறித்து தரப்பட்டுள்ளது. இரும்புப் பெண் இந்திரா வாழ்க்கை வரலாறாக உள்ளது. புத்தகத்தில் உள்ள தியாகமும், வீரமும் வாசிப்பதை துாண்டுகிறது. -– டாக்டர் கார்முகிலோன்




