/ சட்டம் / அறக்கட்டளைக்கான வருமான வரி விவரம்
அறக்கட்டளைக்கான வருமான வரி விவரம்
அறக்கட்டளை துவங்க வழிகாட்டும் நுால். எப்படி துவங்கி நடத்துவது, சட்டப் பூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, விதிமுறைகள், செயல்பாடுகள் கேள்வி – பதில் வடிவில் புரியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது. ஒரு அறக்கட்டளையை உருவாக்குவதற்கு, என்னென்ன அடிப்படை காரணிகள் தேவை, வருமான வரித்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் பாடம் நடத்துவது போல் சொல்லப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் முதலீடுகள் எப்படி எல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்பதை விரிவாகச் சொல்கிறது. கணக்கு தணிக்கை பற்றி படிக்கும் மாணவர்கள், கணக்கியல் தொழில் புரிவோர், அறக்கட்டளை நடத்துவோருக்கு வரப்பிரசாதமாக உள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்