/ வாழ்க்கை வரலாறு / அறுபத்து ஏழாவது அடி

₹ 270

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை வீரர் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாற்று நுால். உரிய படங்களுடன் சுவாரசியம் மிக்கதாக உள்ளது. போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்ற பரபரப்பை தருகிறது.பிரபல வீரர் சச்சின் வாக்கில் கண்ட தன்னம்பிக்கையுடன் இந்த புத்தகம் துவங்குகிறது. மைதானத்தில் பந்து செல்லும் திசை நோக்கி எதிர்பார்ப்புடன் கண்கள் திரும்புவது போல் விறுவிறுப்பாக வாசிக்க ஆர்வமூட்டுகிறது.இக்கட்டான நேரங்களில் விக்கெட் எடுக்கும் அவரது முயற்சி போல் வாழ்க்கை சம்பவங்கள் வியப்பூட்டுகின்றன. சவாலான தருணங்கள், விடாமுயற்சியுடன் நடந்த போராட்டங்கள் எல்லாம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்பிக்கை ஏற்படுத்தும் வாழ்க்கை வரலாற்று நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை