/ கட்டுரைகள் / அசோகமித்திரனும் நானும்
அசோகமித்திரனும் நானும்
மூத்த படைப்பாளி அசோகமித்திரனை சந்தித்தது மற்றும் அவரது படைப்புகளை அணுகிய விதம் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். சென்னை தியாகராய நகரில் எழுத்தாளர் அசோகமித்திரன் வாழ்ந்த காலத்தில் அவரை சந்தித்த அனுபவம், நகைச்சுவையுடன் கூடிய உரையாடலை நினைவு கூர்ந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ்ப் படைப்புலகம் பற்றிய அசோகமித்திரன் எண்ணம் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அசோகமித்திரனின் வாசகன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வதாக நெகிழ்ந்து பதிவு செய்துள்ளார். தமிழ்ப் படைப்பாளர்களை நேரில் சந்தித்த உணர்வை தரும் நுால்.– முகிலை ராசபாண்டியன்