/ ஜோதிடம் / அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம்

₹ 90

மரங்களுக்கு மனிதரால் நேர்ந்துள்ள அழிவை தெளிவாகத் தெரிவிக்கும் நுால். மரங்களின் பசுமையும், காய் – கனிகளும், சுற்றுச்சூழல் மேம்பாடும் ஈடு இணையற்றது. மரங்களை வெட்டும் மனிதன், புதிய கன்றுகளை நடுவது இல்லை; நட்ட மரங்களை காப்பதும் இல்லை. அழிவிலிருந்து மரங்களைக் காக்க வழிகாட்டுகிறது. ஜாதக ரீதியில் வரும் பரிகார பலன்களை, தசாபுத்திகள் வாயிலாக பேசுகிறது.மழை தருவதும், காற்றை துாய்மை ஆக்குவதும், ஒலி மாசை குறைப்பதும் மரமாகும். அரச மரமும், வேப்ப மரமும் தெய்வமாக வணங்கப்படுகின்றன. வேம்பு கிருமி நாசினி, அம்மை நோய், பேய் விரட்டும். நீரிழிவு நோய்க்கு வேம்பே மருந்தாகும். விருட்ச சாஸ்திரப்படி சூரிய தசை ஆறு ஆண்டு பாடாய்படுத்தும். பரிகாரமாக கருங்காலி, நெல்லி, அத்தி, அரச மரங்கள் நட்டால் பரிகாரம் கிடைக்கும்.சந்திர தசை 10 ஆண்டு படுத்தாமல் இருக்க பவள மல்லிகை, அரசு, வேம்பு, நாகலிங்கம், மகிழ மரங்கள் நடலாம். வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன்படும் மரங்கள், வளமையை அளிப்பதோடு, அதிர்ஷ்டத்தையும் அளிப்பதாகக் கூறும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


வாசகர்கள் கருத்துகள் (1)

S Ranganathan
ஆக 01, 2025 02:33 PM

Want to buy this book


புதிய வீடியோ